குழந்தை தோடு திருட்டு பெண்ணுக்கு 'காப்பு'

தலைவாசல்: தலைவாசல், வீரகனுார், தெற்கு மேடை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது, 3 வயது பெண் குழந்தை சன்னித்தா. தென்கரையில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று வருகிறார். அவரை, நேற்று காலை, 10:00 மணிக்கு, அங்கன்வாடியில் அவரது தாய் சுகன்யா விட்டு வந்தார். சிறிது நேரத்தில், உதவியாளர் அஞ்சலிதேவி தொடர்பு கொண்டு, சிறுமியிடம் ஒரு பெண், 2 கிராம் கொண்ட தோடை கழற்றிச்சென்றார் என கூறியுள்ளார்.

இதுகுறித்து சுகன்யா புகாரில் வீரகனுார் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த, மாதேஸ்வரன் மனைவி நதியா, 38, நகை திருடியது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.

Advertisement