கஞ்சா, புகையிலை ரயிலில் பறிமுதல்

சேலம்: ரயில்வே பாதுகாப்பு படை, சேலம் ரயில்வே போலீசார் அடங்கிய தனிப்படையினர், நியூஜல்பைகுரி - நாகர்கோவில் அம்ரித் பாரத் விரைவு ரயிலில் நேற்று, ஜோலார்பேட்டையில் ஏறி சோதனை மேற்கொண்டனர். பொதுப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, 16 கிலோ கஞ்சா, 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததால்,

பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் சில்சார் எக்ஸ்பிரஸ் ரயிலில், 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement