கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம், சிவதாபுரத்தில், சாக்கடை சுத்தி கரிப்பு நிலையத்தை நிறுவும் மாநகராட்சியை கண்டித்து, கோட்டை மைதானத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ் பேசியதாவது: சிவதாபுரம் சுடுகாடு, அருகே பள்ளி கள் உள்ள பகுதியில் கழிவுநீர் தொட்டி நிறுவி, சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படுவர். துர்நாற்றம் வீசி கொசுத்தொல்லை அதிகமாகும். சுடுகாடும் இருக்காது. எதிர்காலத்தில் பள்ளியை விரிவாக்கம் செய்வது கேள்விக்குறியாகும். அதனால் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை, மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement