பட்டு கூடு உற்பத்தி கலெக்டர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் (வித்தகம்) அலுவலகத்தில், பட்டு கூடு உற்பத்தி, விதை கூடுகள் கொள்முதல், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு
மேற்கொண்டார்.

அப்போது, பல்நிலை குளிர்பதன நிலையத்தில் அட்டவணை படுத்தப்பட்டுள்ள பட்டு முட்டைகள், உற்பத்தி செய்யப்படும் செயல்முறை மற்றும் விற்பனை செய்யப்படும் முறைகள், பட்டு கூடுகள் கொள்முதல், பராமரிப்பு மற்றும் குளிர்பதனம் செய்யப்படும் முறை, கூட்டு புழுக்களை ஆண், பெண் இனம் பிரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏஞ்சலின் பொன்ராணி, பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் தங்கபாண்டி (வித்தகம்), ஆனிப்பிரின்ஸி (விரிவாக்கம்), இளநிலை ஆய்வாளர்கள் சதீஷ்குமார், சாவித்ரி, மோகனசுந்தரம், ராஜேஷ்கண்ணா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement