கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
புதுடில்லி: ஒரு டாலருக்கு 97 ரூபாய் என்ற நிலையை நோக்கி இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், மேலும் தெரியாமல் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான டாலர்களை நேரடியாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறிப்பிட்ட வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது பொது சந்தையில் டாலருக்கான தேவையை குறைத்து, ரூபாய் மதிப்பின் சரிவை உடனடியாகத் தடுக்க உதவும்.
ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க ரிசர்வ் வங்கி தனது வசம் உள்ள கையிருப்பில் இருந்து அதிக அளவில் அமெரிக்க டாலர்களை பொதுச் சந்தையில் விற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான அன்னியச் செலாவணி கட்டுப்பாடு விதிமுறையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முறையான வணிக ஆதாரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் டெரிவேட்டிவ் பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை 100 மில்லியன் டாலரில் இருந்து 5 மில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி சந்தையில் மாறிவரும் சூழலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்தையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் மத்திய வங்கி தெரிவித்தது. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பணச் சரிவைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@block_Y@
கடும் உயர்வு
சர்வதேச சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் டாலர் 104.72 ஆகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் டாலர் 91.85 ஆகவும் அதிகரித்துள்ளன.block_Y
நம்ம பொருளாதாரம் தனியா 7.8 சதவிதம் வளந்து ஸ்ட்ராங்கா இருக்காமே.மேலும்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் வழங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயரை வைத்து விடலாம்; சொல்கிறார் டிரம்ப்
-
தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்