கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மோடிகுப்பத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான, 70 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது.
அப்பகுதிக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து, தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் வழி தவறி, கிருஷ்ணனின் விவசாய கிணற்றில் விழுந்து, வெளியேற வழியின்றி கத்தியுள்ளது. தகவலறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், நிலைய அலுவலர் சேட்டு தலைமையில் ஊர் மக்களுடன் ஒன்றிணைந்து கயிறு கட்டி இறங்கி, 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
Advertisement
Advertisement