போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
கரூர்:கரூர்
அருகே, போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் செலுத்திக்
கொண்ட, 4 இளைஞர்களை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
தெற்கு காந்திகிராமம் பகுதியில், தான்தோன்றிமலை எஸ்.எஸ்.ஐ.,
அறிவழகன் உள்பட போலீசார், நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில்
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு காந்திகிராமம்,
இந்திரா நகர் எதிரே ரயில் பாதை அருகே உள்ள முட்புதரில், சிலர் மயக்க
நிலையில், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதை கண்டனர்.
அவர்களை சோதனை செய்தபோது, போதை மாத்திரைகளை அவர்கள் தண்ணீரில்
கரைத்து, அதை ஊசி மூலம் செலுத்தி கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து
இந்திரா நகரை சேர்ந்த தனுஷ், 23, மணிகண்டன், 19, சக்தி நகரை சேர்ந்த
சூர்யா, 23, வடக்கு காந்திகிராமம் முத்துநகரை சேர்ந்த நிஷாந்த், 19,
ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்
அவர்களிடமிருந்து, 3,000 ரூபாய் மதிப்புள்ள, 150 டாபென்டடால்
மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு