ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறார் ராகுல்: பா.ஜ., குற்றச்சாட்டு
புதுடில்லி: ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உண்மைக்குப் புறம்பாக, அரசியல் உள்நோக்கத்துடன் பேசி வருவதாக பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷனில் முறைகேடுகள் நடப்பதாகவும், ஓட்டு திருட்டு நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 'இண்டி' கூட்டணித் தலைவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
ராகுல் கிளப்பிய சர்ச்சை:
இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் கூறியதாவது: எங்களின் ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை ஜனாதிபதி மறுக்கவோ, கேள்வி எழுப்பவோ இல்லை. இது எனக்கு பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் தந்தது. எங்களின் புகாரை ஏற்றுக்கொண்ட அவர், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்; அந்த ஆதாரங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., பாய்ச்சல்:
ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜ., செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதான்ஷு திரிவேதி கடும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஜனாதிபதி என்பவர் வெறும் தனிநபர் அல்ல. அவர் நாட்டின் உயரிய அரசமைப்பு அமைப்பு. அவருடனான சந்திப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ராகுல் திரித்துப் பேசியுள்ளார். அவரது இந்த விளக்கம் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்.
முதலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஹேக் செய்யப்படுவதாகக் காங்கிரஸ் கதையளந்தது. இப்போது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்.,) முறைகேடு நடப்பதாகக் கூறுகிறது. இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது.
தேர்தல் முடிவுகள் மீது சந்தேகம் இருந்தால், அதை எதிர்த்து முறையிட காங்கிரசுக்கு சட்டப்படி 45 நாட்கள் அவகாசம் உள்ளது. இவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடுவதே சரி. ஜனாதிபதியுடனான சந்திப்பைத் திரித்துப் பேசுவதும், தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராக விஷமப் பிரசாரம் செய்வதும், ராகுல் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறார் என்பதையே காட்டுகிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.
இவனும் பைத்தியம். இவன்கூட சென்றவர்களும் பைத்தியதுக்குப் பிறந்த பைத்தியங்கள். complaint உடன் proof ஐயும் இருக்கும் பட்சத்தில் சேர்த்துக் கொடுத்துட்டு வரவேண்டியதுதான?
Ragul is the "Leader of the Anti Nationals"
அவர்களே தயவு செய்து இந்த அப்பாவி என்ற சொந்த பெயரில் கருத்து எழுத கூட தைரியம் இல்லாத அறிவாளிகளின் , போலி காந்தி குடும்ப கொத்தடிமைகளின் கேவலமான தேச விரோத கருத்துகளை வெளியிடாதீர்கள்.
அவர்... அந்நிய நாடுகளின் கைக்கூலியாக மாறி விட்டார்..... ஜார்ஜ் சோரஸ் கும்பல் சொல்படி தான் அவர் நடந்து கொள்கிறார்.
ராகுல் மற்றும் அவருடைய கட்சி சேர்ந்தவர்கள் எப்பொழுதுமே நம் தேசம் என்று நினைப்பதில்லை. தேர்தல் கமிஷன் தவறு செய்ததினால் அவர் மற்றும் பிரியங்கா MP பதவியில் உள்ளனர் என்று நாம் சொல்வோம்.
அப்ப இந்த டாஸ்மாக் நாட்டில் TVK 108 தொகுதிகள் வெற்றி பெற்றதே அது எப்படி அதுவும் தேர்தல் கமிஷன் சதி தானா , அப்படி சதி செய்து வெற்றி பெற்ற கட்சிக்கு ஏன் ஆதரவு அளித்து ஆட்சியில்
பங்கு எடுத்து கொண்டீர்கள் ......
ராகுலின் நாடகம் எடுபடாது
தேசத் துரோகி ராகுல். நாடு கடத்தப்பட வேண்டும்.
மொத்தத்தில் டாலரில் கூலி வாங்கும் Consistently. இந்தியாவை அழிக்க பிறந்த குடும்பம் நேரு குடும்பம்..
ராகுல் மற்றும் கரப்பான்கள் அன்னிய கைகூலிகளாக இந்திய ஜனநாயகத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரிகளாக செயல்படுகிறார்கள். சில படித்த அறிவிலிகள் கூட பாஜகவை எதிர்க்கிறோம் என்று எண்ணி இந்த தேச விரோதிகளுக்கு ஆதரவாக இருக்கிறாங்க.மேலும்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு