ரயில் மோதி பெண் பலி

ஈரோடு:ஈரோடு, வெண்டிப்பாளையம், பழைய கரூர் சாலை, கோணவாய்க்கால் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

கவனக்குறைவாக தண்டவாளத்தை நேற்று கடந்த பெண், அப்போது வந்த ரயில் மோதியதில் பலியானார். போலீஸ் விசாரணையில் ஈரோடு வளையக்கார வீதி பிரகாஷ் மனைவி ஜெகதாம்பாள், 55, என்றும், வீடு வாடகைக்கு பார்க்க வந்தபோது விபத்தில் பலியானது தெரிந்தது.

Advertisement