'ஒன் ஸ்டாப் சென்டரை' பயன்படுத்த யோசனை

ஈரோடு:ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, 'டி.என்.ரைட்' திட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) ஈரோடு மற்றும் கோபி கோட்ட அளவிலும், 18 வட்டாரங்களில் என, 20 மையம் அமைக்க அறிவிக்கப்பட்டது. தற்போது இரு கோட்டம், 16 வட்டாரங்களில் மையம் செயல்படுகிறது.

இவற்றில் இதுவரை, 1,066 பேர் பயன் பெற்றுள்ளனர். 18 வட்டாரத்துக்கும் ஒரு வட்டாரத்துக்கு, 3 அருகாமை மையங்கள் வீதம், 54 மையம் அமையவுள்ளது. அந்தியூர் யூனியன் பர்கூர் பஞ்., தாமரைக்கரை சமுதாய கூடத்தில் அருகாமை மையம் கடந்த, 7 முதல் சேவை வழங்கப்படுகிறது.
இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் விபரத்தை, 94999 33475 என்ற எண்ணில் அறியலாம்.

Advertisement