மாவட்ட தடகள போட்டி

காரைக்குடி: சிவகங்கை மாவட்ட அளவிலான தடகளப் போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலை சிறப்பு பள்ளி, சிறப்பு கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை, சிறப்பு ஒலிம்பிக் பாரத் தமிழ்நாடு சார்பில் நடந்தது. போட்டியை அமைச்சர் பிரபு தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். துணை வேந்தர் ஜெயகாந்தன் தலைமை ஏற்றார். பேராசிரியர் சுஜாதா மாலினி வரவேற்றார். அழகப்பா பல்கலை தேர்வாணையர் ஜோதி பாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement