மின்னணு வேளாண் பயிற்சி

சோழவந்தான்:சோழவந்தான் விதைப்பண்ணையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மின்னணு வேளாண்மை குறித்த பயிற்சி நடந்தது. வேளாண் அலுவலர் டார்வின் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் தாரணி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுப்பிரமணியன் பேசினர். உதவி வேளாண் அலுவலர் விக்டோரியா செலஸ் உழவன் செயலியை பயன்படுத்தும் முறைகள், வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள இடுபொருட்கள், உயிரிஉரங்கள் இருப்பு, பயன்பாடு குறித்து விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா நன்றி கூறினார். விவசாயிகள், வேளாண்மை ஆர்வலர்கள் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பூமிநாதன், அருணாதேவி, ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement