பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி வார சிறப்பு பூஜை நடந்தது. சுவாமி ஸ்ரீதேவி பூதேவியர், செங்கமலத்தாயார் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடந்தது. பரிவார தெய்வங்கள் கருடாழ்வார், கால பைரவர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் பூஜைகள் நடந்தது. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சக்கம்பட்டி கிழக்குத்தெரு ராஜா, மந்திரி வகையறா பக்கர்கள் சார்பில் புரட்டாசி 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி திருமலை வெங்கடேசன், பெருமாள் சுவாமி குறித்த பஜனை பாடல்களை பல்வேறு கோயில்களில் பாடி சக்கம்பட்டி கிராமத்தை வலம் வந்தனர். பகவதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நிறைவுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

போடி: உப்புக் கோட்டை வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

போடி சீனிவாசப் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. போடி மேலச்சொக்க நாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், விசுவாசபுரம் வேங்கட வரதராஜ பெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜ பெருமாள், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.

பெரியகுளம்: வரதராஜப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு 16 வகையான அபிஷே கங்கள் நடந்தது. சுவாமி திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாமரைக்குளம் மலை வெங்கடாசலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement