டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
புதுடில்லி: டில்லியில் பல இடங்களில் கனமழை கொட்டியதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக டில்லியின் பல முக்கியப் பகுதிகளிலும், அதன் அண்டை நகரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசலும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. கரோல் பாக் பகுதியிலுள்ள புகழ்பெற்ற ஜண்டேவாலான் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நொய்டா, குருகிராம் மற்றும் காசியாபாத் ஆகிய நகரங்களிலும் அதிகாலையிலேயே இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகி உள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்களது விமானச் சேவை நிறுவனங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய வானிலை மையம் டில்லிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளதுடன், நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. மணிக்கு 15 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய கடுமையான இடியுடன் கூடிய புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டெலிஹில் பல இடங்களில் கலவரம்மேலும்
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
பொய்யான தகவலை பரப்பிய அபிஜித் தீப்கே; வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்திய டில்லி போலீஸ்
-
நானா படேகர் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்பட்டது; வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
-
திருநங்கைகள், பெண்களுக்காக வருகிறது பிங்க் இ-ஆட்டோ திட்டம் ; டில்லி அரசு அறிமுகம்
-
வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை