ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கமாக கணப்பட்டு வந்தது. ஆனால், இந்த அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரும்பாலும் சரிவை சந்தித்து வருகின்றன.

வாரத் துவக்கத்தின் முதல் நாளான இன்று (அக்.,12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,720க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840க்கு வர்த்தகமாகிறது. அக்.,10ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,11,040க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Advertisement