மருத்துவப் பணியாளரகள் கைதுக்கு உதயநிதி கண்டனம்
சென்னை: போராட்டம் நடத்தவிருந்தமருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை; தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டில்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த ஷோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப்பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?
விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா? மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதல்வர் முன்வர வேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு; தவெகவின் பலம் 109ஆக அதிகரிப்பு
-
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
-
பொய்யான தகவலை பரப்பிய அபிஜித் தீப்கே; வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்திய டில்லி போலீஸ்