'ஹே' பெண்கள் ஆடையகம் கிளை கடலுாரில் திறப்பு

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் அருகில் (சூரப்பன்நாயக்கன் சாவடி) எதிரில் ''ஹே'' என்ற பிரமாண்டமான பெண்கள் ஆடையகத்தின் கிளை திறப்பு விழா நடந்தது. 'ேஹ' ஆடையகத்தின் கடலுார் கிளை உரிமையாளர்கள் நற்கவி பிரேம்குமார், அருண் பிரசாத் வரவேற்றனர். 'ேஹ' நிறுவனத்தின் நிறுவனர் ஹரிநந்தினி சங்கீத், இயக்குனர் சங்கீத் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினரான வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவில், அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், வர்த்தகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பங்கஜம் பிளானர்ஸ் ஆறுமுகம், சாரதா ஆறுமுகம் நன்றி கூறினார். இங்கு, 'பேசிக் குர்திகள், ஏ-லைன் குர்திகள், கோ-ஆர்மு ஆடைகள், மேக்ஸி ஆடைகள், சல்வர் குர்திகள், துப்பட்டா என பல துணிகள் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக குறிப்பட்ட நாள் வரை 30 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது என கடை உரிமையாளர்கள்' கூறினர்.

Advertisement