பொய்யான தகவலை பரப்பிய அபிஜித் தீப்கே; வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்திய டில்லி போலீஸ்
புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டில்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் இருந்து டில்லி வந்த கரப்பான் பூச்சி அமைப்பு நிறுவனர் அபிஜித் தீப்கேவை, விமானத்தில் வைத்தே டில்லி போலீசார் கைது செய்தனர். அவரின் செல்போனை பறிமுதல் செய்த பிறகு, தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
அப்போது, மும்பையில் உள்ள அபிஜித்தின் பாட்டி காலமான தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பிறகு, அவர் பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, அனுப்பி வைக்கப்பட்டார். வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே, பாட்டியின் மறைவு குறித்து குடும்பத்தினரிடம் பேச போலீசார் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இறுதிச்சடங்கில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக, தன்னை தாமதமாக விடுவித்தாகவும் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார், 1.45 நிமிடம் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், பாட்டி உயிரிழந்த தகவலை அபிஜித்திடம் போலீசார் தெரிவிக்கின்றனர். அவருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து முதலில் தேற்றினர்.
பிறகு, 'உங்களின் பாட்டி இறந்து விட்டார். நீங்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்க விரும்புகிறீர்களா? அல்லது இங்கேயே இருக்க நினைக்கிறீர்களா? உங்களின் விருப்பம் தான். நீங்கள் செல்வதாக இருந்தால், உங்களுக்கு தேவையான பயண ஏற்பாடுகளை செய்து தருகிறோம். உங்கள் தந்தையிடம் பேச நினைத்தால், செல்போன் எண்ணை தாருங்கள், நாங்கள் தொடர்பை ஏற்படுத்தி தருகிறோம்,' என்றனர்.
ஆனால், 'நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன். இறுதிச்சடங்கு அடுத்த நாள் தான் நடக்கிறது,' என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளார். இதன்மூலம், இறுதிச்சடங்கில் பங்கேற்க போலீசார் அனுமதித்தும், அவர் தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கேயே இருந்தது வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. திட்டமிட்டே போலீசார் தன்னை விடுவிக்க தாமதப்படுத்தியதாக பொய்யான தகவலை பரப்பியது அம்பலமாகியுள்ளது.
மேலும்
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
-
நானா படேகர் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்பட்டது; வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
-
திருநங்கைகள், பெண்களுக்காக வருகிறது பிங்க் இ-ஆட்டோ திட்டம் ; டில்லி அரசு அறிமுகம்
-
வாக்காளர் பட்டியலில் பகத்சிங் படம்: வெடித்தது புதிய சர்ச்சை