திருநங்கைகள், பெண்களுக்காக வருகிறது பிங்க் இ-ஆட்டோ திட்டம் ; டில்லி அரசு அறிமுகம்
புதுடில்லி: பெண்கள், திருநங்கைகளுக்காக, துர்கா இ-ஆட்டோ என்ற திட்டத்தை டில்லி அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஆன்லைன் புக் செயலிகளில் சேவைக் கட்டணம் அல்லது சந்தாக் கட்டணம் இன்றி அவர்களின் ஆட்டோக்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தத்திட்டத்தில் 1,300 மின்சார ஆட்டோக்கள் ஒதுக்கப்படவுள்ளன. 1,170 ஆட்டோக்கள் பெண்களுக்கும், 130 ஆட்டோக்கள் திருநங்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சுயமாக வருமானம் ஈட்ட வழிவகை செய்ய முடியும்.
தேசிய தகவலியல் மையம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். டில்லி மின் வாகனக் கொள்கை 2026ன் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு ரூ. 50,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
மெட்ரோ நிலையங்கள் மற்றும் பணியிடங்களுக்குச் செல்லும் பெண்களின் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், எளிதானதாகவும் மாற்றுவதற்காக இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ நிர்வாகம், என்.சி.ஆர்.டி.சி நிறுவனங்களிடம் பிரத்யேகமான பார்க்கிங் மற்றும் சார்ஜிங் வசதிகள் கோரப்பட்டுள்ளன.
உலகம் மகிழும். நாட்டுக்கு நல்லது.மேலும்
-
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு 3 கடைக்கு ரூ.15,000 அபராதம் விதிப்பு
-
அரளி பூ விலை உயர்வு
-
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
-
யு.பி.ஐ., பண பரிவர்த்தனை மறைமுக வரி விதிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
பைக் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி
-
கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்ட திமுக அவரின் அதிகாரங்கள் குறித்து பேச துவங்கியது எப்போது?: ஐகோர்ட் கேள்வி