நானா படேகர் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்பட்டது; வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

புதுடில்லி: மூத்த நடிகர் நானா படேகர் மாரடைப்பால் காலமானார் என்பதை உறுதிசெய்யும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் நானா படேகர். இவர் கோவாவில் உள்ள தன் வீட்டில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரது நண்பர் அளித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.

மருத்துவமனையில் நானா படேகருக்கு 45 நிமிடங்களுக்கு, இதய துடிப்பை மீண்டும் இயங்க வைப்பதற்கான, சி.பி.ஆர்., சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என கோவா போலீஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பிரிவு 194ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. தற்போது நானா படேகர் மாரடைப்பால் காலமானார் என்பதை உறுதிசெய்யும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை, அரசுக்குச் சொந்தமான கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது முக்கிய கரோனரி தமனியில் (Coronary Artery) ஏற்பட்ட ரத்தம் உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கையான மரணம் என்றும், இதில் எந்தவித மர்மமும் அல்லது முறைகேடும் இல்லை என்றும் பிரேத பரிசோதனை முடிவுகள் தெளிவாகக் கூறியுள்ளன.

Advertisement