கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து வெளியேற்றிய போலீசார்
புதுச்சேரி: புதுச்சேரி கடலில் இறங்கி குளித்த சுற்றுலா பயணிகளை கடேலார போலீசார் எச்சரித்து வெளியேற்றினர்.
புதுச்சேரி சுற்றுலா வரும் வெளி மாநில பயணிகள், புதுச்சேரியின் கடல் அழகை ரசிப்பதை விட, அதில் இறங்கி குளிப்பதால் கடல் அலையில் சிக்கி உயிரிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், புதுச்சேரி போலீசார் கடலில் குளிக்க தடை விதித்துள்ளனர். அதனையும் மீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கடலோர பாதுகாப்பு போலீசார் கடற்கரையில் ரோந்து சென்று, கடலில் இறங்கி குளிப்போரை கரைக்கு அழைத்து கடலில் உள்ள ஆபத்து குறித்து விளக்கி வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதுச்சேரி வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சென்றனர். அவர்களை கடலோர போலீசார் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். சுற்றுலா பயணிகள் கடலை கரையில் இருந்து ரசிக்கலாம். கடலில் இறங்கி ரசிக்க முயற்சித்தால் ஆபத்து தானாக தேடி வரும் என, போலீசார் அவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
டில்லியில் கட்டுப்பாடுகள் விதித்ததை எதிர்த்த வழக்கு; நாளை விடுமுறையில் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
-
பிரதமர் வருகை எதிரொலி; நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்
-
சவுதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்
-
2017ல் முளைத்த பயங்கரவாத சிந்தனை; பிளைதுபாய் துணை விமானியின் திட்டம் அம்பலம்
-
உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை :கடத்தப்பட்ட 5.64 லட்சம் கிலோ அரிசி மீட்பு
-
‘21,060 மரக்கன்றுகளை நட்டதற்கு ஆதாரமில்லை’