2017ல் முளைத்த பயங்கரவாத சிந்தனை; பிளைதுபாய் துணை விமானியின் திட்டம் அம்பலம்
துபாய்: 'பிளைதுபாய்' விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த முயன்ற துணை விமானி, 2017ல் ஆஸ்திரேலியாவில் படிக்கும்போதே பயங்கரவாத இயங்கங்களுடன் தொடர்பில் இருந்ததும், தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற, 'பிளைதுபாய்' விமானத்தை கடத்தி விபத்தை ஏற்படுத்த சமீபத்தில் முயற்சி நடந்தது. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல் ஹம்மாமி இந்த சதி செயலில் ஈடுபட்டார். பிடிபட்ட துணை விமானி ஹம்மாமியிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், ஹம்மாமி 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படித்துக்கொண்டிருந்தபோது மூளைச்சலவை செய்யப்பட்டு பயங்கரவாதத்தின் பக்கம் சாய்ந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2001ல் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலைப் போலவே, இஸ்ரேலின் டெல் அவிவ் விமானநிலையத்தை தகர்க்கவேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார். தாக்குதலை எந்தவிதத் தவறும் இல்லாமல் அரங்கேற்ற பலகட்ட முன்னேற்பாடுகளை செய்துள்ளார்.
குறிப்பாக, டெல் அவிவ் செல்லும் விமான வழித்தடங்கள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு முறைகளைத் துல்லியமாக அறிந்துகொள்வதற்காக, ஏற்கனவே இரண்டு முறை அந்த வழித்தடத்களில் பயணித்து ஒத்திகை பார்த்துள்ளார்.
அனைத்துத் திட்டங்களையும் வகுத்துவிட்டு, செப்டம்பர் 30ம் தேதி தாக்குதலை நிகழ்த்த முயன்றபோது நம் நாட்டு விமானி ஸ்மிட் மச்சார் சாதுர்யத்தால் சிக்கிக்கொண்டார்.
பயங்கரவாதிக்கு என்ன மரியாதை?மேலும்
-
அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை முயற்சி மனைவி புகாரில் ‘சஸ்பெண்ட்’ காவலர் கைது
-
போதை மாத்திரை வாங்க வந்த வாலிபர் கைது
-
ரோபோடிக் மூலம் 100 அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை
-
மழை வேண்டி சிறப்பு பூஜை
-
‘ஹைமாஸ்’ விளக்கு பழுதால் மக்கள் அவதி
-
மினரல் வாட்டர் பிளான்ட் பழுது குடிநீருக்கு அலையும் நோயாளிகள்: அரசு தலைமை மருத்துவமனையில் அவலம்