பிரதமர் வருகை எதிரொலி; நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: பிரதமர் மோடி நாளை ஞாயிறு (11ம் தேதி) சென்னை வருவதையொட்டி, காலை 8 மணி முதல் மாலை 4:30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை;

ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள்: தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் குன்றத்தூர் சாலையை நோக்கித் திருப்பி விடப்படும்.

பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள்: 'இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சந்திப்பு' (ஹோட்டல் ஏர்வே) அருகே தாம்பரத்தை நோக்கித் திருப்பி விடப்படும்.

ஜே என் 100 அடி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்:

கோயம்பேட்டிலிருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் 2வது அவென்யூவில் கோயம்பேடு அல்லது கே.கே.நகர் நோக்கித் திருப்பி விடப்படும்.

அசோக் பிள்ளரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கித் திருப்பி விடப்படும்.

மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள்:

மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கித் திருப்பி விடப்படும்.

மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் ராமாபுரம் சந்திப்பில் அரசமரம் சந்திப்பு நோக்கித் திருப்பி விடப்படும்.

சர்தார் பட்டேல் சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:

OMR மற்றும் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் CPT நோக்கித் திருப்பி விடப்படும்.

காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் CPT நோக்கித் திருப்பி விடப்படும்.

வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் பட்டேல் சாலை நோக்கி வரும் வாகனங்கள்:

வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து சர்தார் பட்டேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள், குரு நானக் சந்திப்பில் வேளச்சேரி நோக்கித் திருப்பி விடப்படும்.

அண்ணா சாலையிலிருந்து லோக் பவன் நோக்கி வரும் வாகனங்கள்:

அண்ணா சாலையிலிருந்து வரும் வாகனங்கள் MC ராஜா யூ-டர்ன் (U-turn) பகுதியில் அண்ணா சாலை திசையிலேயே திருப்பி விடப்பட்டு, தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement