ஆப்கன் நிதான ஆட்டம்

அபுதாபி: அபுதாபி டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடக்கிறது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 317/8 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. தய்ஜுல் (9), எபாதத் (0) அவுட்டாக, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 346 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நயீம் ஹசன் (35) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் 4, யாமின் 3 விக்கெட் சாய்த்தனர்.
ரஹ்மத் அபாரம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு செடிகுல்லா (17), ஷாஹிதுல்லா (20) விரைவில் அவுட்டாகினர். அப்துல் மாலிக் 62 ரன் எடுக்க, கேப்டன் ரஹ்மத் ஷா தன் பங்கிற்கு அரைசதம் கடந்தார். இரண்டாவது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211/4 ரன் எடுத்து, 135 ரன் பின்தங்கி இருந்தது. ரஹ்மத் ஷா (84), இக்ரம் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement