ரொனால்டோ 'சஸ்பெண்ட்': போர்ச்சுகல் அணி நடவடிக்கை
லிஸ்பன்: போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. உலக கோப்பை தொடருக்குப் பின் புதிய பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் வந்துள்ளார். இவருக்கும் ரொனால்டோவுக்கும் கருத்து வேறு ஏற்பட்டுள்ளது.
ரொனால்டோ இல்லாமல் பங்கேற்ற 3 போட்டிகளில் போர்ச்சுகல் வென்றுள்ளது. இவருக்குப் பதில் வாய்ப்பு பெற்ற கொன்சாலோ ராமோஸ், 3 கோல் அடித்துள்ளார். இதனிடையே நார்வேக்கு எதிரான போட்டியில், ரொனால்டோவுக்கு வாய்ப்பு தராமல், மைதானத்தின் ஒரு பகுதியில் பயிற்சி செய்யுமாறு, பயிற்சியாளர் ஜீசஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது தவறு என, ஜீசஸ் ஒப்புக் கொள்ள வேண்டும் என ரொனால்டோ கேட்க, பயிற்சியாளர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த ரொனால்டோ, போர்ச்சுகல் அணி முகாமை விட்டு வெளியேறினார். விரைவில் ஓய்வு அறிவிப்பார் என நம்பப்பட்டது.
இவ்விஷயத்தில் தலையிட்ட போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு, ரொனால்டோவை சஸ்பெண்ட் செய்தது. விசாரணை முடிவில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில்,'' அணியில் இருந்து வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தண்டனை வழங்க வேண்டும். தடைக்குப் பின் ஒன்று அல்லது இரண்டு பிரியாவிடை போட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.
மேலும்
-
சின்ன பெண்ணுக்கு ஆயுசு ரெம்ப கெட்டி
-
அரசு பள்ளி மாணவர்களிடம் ரூ.50 கோடி வினாத்தாள் கட்டண முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனு
-
மிஸ்டர் மூளைக்காரன்: மு.க.ஸ்டாலின் எனும் தீர்க்கதரிசி
-
பதுக்கலால் தாறுமாறாக உயர்கிறது அரிசி விலை: வறட்சியை காரணம் காட்டி மக்களை வஞ்சிக்கும் வியாபாரிகள்
-
காங்கிரஸில் வயதானோருக்கு கல்தா!
-
பிரதமர் மோடி உத்தரவு!