மிஸ்டர் மூளைக்காரன்: மு.க.ஸ்டாலின் எனும் தீர்க்கதரிசி

என்ன கண்களை மூடினால் ‛இஷ்க்.. இஷ்க்..' என்று கேட்கிறதா

ஆமாம் ஸ்வாமி... 'இஷ்க்... இஷ்க்...' என்றுதான் கேட்கிறது!

'என் பையனையும் உங்களை மாதிரி ஸ்டைலா முடி வைச்சுக்க சொல்லி இருக்கேன்' என்று, நடிகர் சிவகார்த்திகேயனிடம் தன் மகன் முன்னிலையில் சொல்லி, தன் தாய்மைக்கு பெருமை சேர்த்த அந்த தெய்வத்தாயின் குரல் உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?

இல்லை ஸ்வாமி!

என்ன இது சோதனை; இந்த உளுந்துார் பே ட்டை உலகானந்தாவிற்கு கேட்பது ஏன் என் பக் தர்களுக்கு கேட்கவில்லை?

தங்களுக்கு வேறென்ன கேட்கிறது ஸ்வாமி?

'ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்து, அரசியலுக்கு வந்து, ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக பலரது முகமூடிகளை கிழித்து, தற்போது மக்களுக்கான ஓர் அமைப்பை நிறுவி, அதன்மூலம் மாதம் ஒ ரு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறாரே... அவர் பின்னால் அணிவகுத்து செல்ல உங்கள் இளைஞர்களுக்கு என்ன தயக்கம்' எனும் அந்த அண்ணாமலையாரின் குரல் கேட்கிறது!

ஆச்சரியம் பார்த்தீர்களா ஸ்வாமி; எங்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி சொல்லும் உலக மகா தத்துவங்கள் கூட கேட்கவில்லை; 'இஷ்க்... இஷ்க்...' என்று மட்டுமே கேட்கிறது!

சரி விடுங்கள்... எது கேட்டாலும் நீங்கள் சிரிக்கத்தானே போகிறீர்கள்?

ஆம் ஸ்வாமி; 'தமிழக மக்கள் புத்திசாலிகள்; அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது' என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்வாரே... நிகழும் கூத்துகளை பார்க்கையில் எல்லாம் அதை நினைத்தும் சிரித்துக் கொள்கிறோம்!

அடடே... அப்படியா... மிக்க மகிழ்ச்சி; ஆமாம்... அங்கே என்ன சத்தம்... மீண்டும், 'இஷ்க்... இஷ்க்...' கேட்கிறதா?

இல்லை சாமி... 'இப் யூ ஆர் பேட்; ஐயாம் யுவர் டாட்' என்றொரு கூச்சல்; அதைக் கேட்டதும், 'தனுசு' ராசிக்காரனான என் உடம்பெல்லாம் கடுமையாய் பதறுகிறது!

ஆஹா... ஏதோ பெரும் விபரீதம் நெருங்கி வி ட்டதென நினைக்கிறேன்! 'ஆசிரிய பெருமக்கள் மனது வைத்து, மொத்தமாய் திருத்த முயன்றால் மட்டுமே இனி நம் மண்ணுக்கு எதிர்காலம்' என்று எனக்குத் தோன்றுகிறது!

இல்லை ஸ்வாமி... 'டிவிகே... டிவிகே... டிவிகே...' என்று உரக்க கோஷமிட்டாலும் நம் எதிர்காலம் சிறக்கும்; ஏன் ஸ்வாமி சிரிக்கிறீர்கள்?

அது வேறு ஒன்றுமில்லை... முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை நானும் நினைத்துப் பார்த்தேன்; சிரித்து விட்டேன்.

Advertisement