சஹாஜா ஜோடி அசத்தல்
லெக்சிங்டன்: லெக்சிங்டன் டென்னிஸ் தொடரில் சஹாஜா ஜோடி சாம்பியன் ஆனது.
அமெரிக்காவின் லெக்சிங்டனில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, மொராக்கோவின் எல் ஜார்டி ஜோடி, உக்ரைனின் வலேரியா, தலாய்னா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை சஹாஜா ஜோடி 2-6 என இழந்தது. பின் அடுத்த செட்டை 7-5 என போராடி கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி 'சூப்பர் டை பிரேக்கருக்கு' சென்றது.
இதை சஹாஜா ஜோடி 12-10 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 2-6, 7-5, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உழந்தை ஏரி கரைகளை பலப்படுத்த கோரிக்கை
-
வீட்டின் பூட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
'என் கண்டுபிடிப்புகள் இயற்கை வளங்களை பாதிக்காமல் இருக்கும்!
-
வழக்கறிஞர் கொலை முயற்சி வழக்கில் பெண் கைது
-
ஆம்னி பஸ்சில் ரூ.11 லட்சம் மதிப்பு 22 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது
-
மாணவர்கள் மனித நேயத்துடன் மருத்துவ சேவையாற்ற வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பேச்சு
Advertisement
Advertisement