குழாய் உடைந்து 2 ஆண்டு குடிநீர் வீணாகும் அவலம்

பல்லடம்: பல்லடம் நகராட்சி, என்.ஜி.ஆர். ரோடு, அண்ணாதுரை சிலை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், குடிநீர் தினமும் ரோட்டில் வழிந்தோடி விரயமாகிறது.

வால்வு பகுதியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் திறக்கும்போதெல்லாம் நடைபாதையில் வாய்க்கால் போல தேங்கி நிற்கிறது. இதனால் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து வருகின்றன. செடிகளும் முளைத்துள்ளன. அருகில் மற்றொரு இடத்திலும் இதேபோல் குடிநீர் வெளியேறுகிறது.

குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தினமும் குடிநீர் விரயமாவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை அளிக்கிறது. உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement