அக்.14ல் தபால் சேவை குறைதீர் முகாம்
மதுரை: மதுரை பீ.பி.,குளம் தெற்கு மண்டல தபால்துறைத் தலைவர் அலுவலகத்தில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் அக். 14 காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
வாடிக்கையாளர்கள், தபால்துறை சம்பந்தமான குறைகளை முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புநர், பெறுநர் உள்ளிட்ட விபரங்களுடன் அனுப்ப வேண்டும். சேமிப்பு அல்லது காப்பீடு திட்டங்கள் தொடர்பான குறைகளுக்கு, கணக்கு அல்லது பாலிசி எண், வைப்புத் தொகையாளர் அல்லது காப்பீட்டாளரின் முழு முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
இம்முகாமில் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய தபால் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் குறைகளை அனுப்ப வேண்டும்.
புதிய புகார்கள் மீது இம்முகாமில் நடவடிக்கை எடுக்கப்படாது.
புகார்களை ‘தபால் சேவை குறைதீர் முகாம் – அக்டோபர் 2026’ என குறிப்பிட்டு ‘உதவி இயக்குர் (இன்வெஸ்டிகேஷன் மற்றும் விஜிலென்ஸ்), தபால்துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை – 625 002’ என்ற முகவரிக்கு தபால் வாயிலாகவோ, pg.madurai@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, நாளை (அக்.12) மாலை 6:00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும்
-
மருத்துவப் பணியாளரகள் கைதுக்கு உதயநிதி கண்டனம்
-
மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு; தவெகவின் பலம் 109ஆக அதிகரிப்பு
-
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்