தமிழ் தளத்தில் பட்டிமன்ற கடவுள் சாலமன் பாப்பையா: உயர்நீதிமன்ற நீதிபதி புகழாரம்
மதுரை: ''தமிழ் தளத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு கடவுள் என்று சொன்னால், அது மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா உருவில்தான் இருக்க ஆசைப்படுகிறேன்'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.
சாலமன் பாப்பையாவிற்கு புகழஞ்சலி மற்றும் அவர் எழுதிய 'பட்டிமன்றம் பாதைகளும், பயணங்களும்', 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பார்வை', எபூங்காவில் கொய்த பூக்கள்' புத்தகங்கள் வெளியீட்டு விழா நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.எச்.,) சார்பில் மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்தது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது:
சாலமன் பாப்பையாவுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அதில் 100 ஆண்டுகள் ஆழம் இருந்தது. அன்பு பார்வையால் ஆக்கிரமித்தவர். இலக்கிய உலகிற்குள் சாதாரண மனிதனை எடுத்துக்கொண்டு போன பெருமை அவருக்குண்டு.
காவியங்களின் கதவுகளை மட்டும் தட்டி காப்பிய கதாநாயகர்களை விசாரணைக் கூண்டில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த பட்டிமன்ற மேடைகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், வெவ்வேறு வீடுகளிலுள்ள உறவு முறை சிக்கல்கள், எளிய மக்களின் இயல்பான கேள்விகளை பாடுபொருளாக மாற்றியவர்.
எளியவர்களின் மொழியை சூட்டிக் கொண்டு மண்ணில் உலவிய பட்டிமன்ற இறை அவர்.
கிரேக்கத்தில் நெருப்பு, மருத்துவத்திற்கு தனித்தனி கடவுள் உண்டு. தமிழ் தளத்தில் பட்டிமன்றத்திற்கு ஒரு கடவுள் என்று சொன்னால், அது சாலமன் பாப்பையா உருவில்தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார்.
என்.சி.பி.எச்.,தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், பேராசிரியர் ராஜாராம் பங்கேற்றனர்.
மேலும்
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்த எல்லைக்கோடு தேவை
-
சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை கரூர், அக். 12
-
அ.தி.மு.க., வில் பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி ஆட்டம் மீண்டும் ஆரம்பம்; இடைத்தேர்தலில் தோல்வி எதிரொலி
-
'மாஜி' ராணுவத்தினர் நலச்சங்க பொதுக்குழு
-
சுத்தம் செய்யாத சாக்-கடை கால்வாய்
-
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்