போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்த எல்லைக்கோடு தேவை
கரூர்:கரூர்
நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா
கார்னர் சாலை மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் சாலைகளில் வர்த்தக
நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும்
விடுதிகள் உள்ளன.
இதனால், அந்த சாலைகளில் கார், டூவீலர், வேன்
உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள், நீண்ட நேரம் நிறுத்திவிட்டு
செல்கின்றனர்.இதனால் கரூர் நகர பகுதிகளில், நாள்தோறும் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில், கரூர்
நகரப்பகுதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட எல்லை
பகுதிகளில் நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில்,
சில மாதங்களுக்கு முன், சாலைகளில் பெயின்ட் மூலம் கோடுகள்
வரையப்பட்டன.
தற்போது, அந்த கோடுகள் அழிந்துவிட்டன. இதனால்,
பொதுமக்கள் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை, தாறுமாறாக
நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், கரூர் நகரப்பகுதிகளில்
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கரூர் நகர
பகுதிகளில் முக்கிய சாலைகளில், புதிதாக வெள்ளைக்கோடு வரைந்து,
வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார்
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
-
செவன்த் டே பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
மேலாளரை கத்தியால் குத்திய டிரைவர், கண்டக்டர் கைது
-
கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி விற்க முடிவு: விலை உயர்வை சமாளிக்க திட்டம்
-
நவம்பரில் மதுரை புத்தகத் திருவிழா: நவ.13 முதல் நடத்த திட்டம்
-
குப்பையை தரம்பிரித்து வழங்காத கடையின்தொழில் உரிமம் ரத்து: நகராட்சி எச்சரிக்கை