இயற்கை உரங்களின் பயன்பாட்டிற்காக வெளிமாநிலம் செல்லும் ஆட்டுப்புழுக்கை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆட்டுப்புழுக்கையை இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்காக அழைத்து வந்து பின் விவசாய நிலத்தில் அடைத்து வைக்கின்றனர்.
அங்கு ஆட்டுப்புழுக்களை பல மாதங்களாக சேகரித்து வைக்கின்றனர். அதனை இயற்கை உரத்திற்காக மூடை ரூ.500 முதல் 1000 வரை கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
ஆட்டுப்புழுக்கை உரத்தின் நன்மைகள் தாவரங்களுக்கும், மண்ணின் வளத்திற்கும் மிகச்சிறந்த சத்து நிறைந்த இயற்கை உரமாகும்.
இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உள்ளன. மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் திறனை அதிகரித்து வேர் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் வீட்டுத்தோட்டம் மாடி தோட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்று விவசாயிகள் கூறினர்.
மேலும்
-
மருத்துவப் பணியாளரகள் கைதுக்கு உதயநிதி கண்டனம்
-
மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு; தவெகவின் பலம் 109ஆக அதிகரிப்பு
-
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
-
காவிரி நீர் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை; டில்லியில் தமிழக அதிகாரிகள் ஆலோசனை
-
சேலத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் கொள்ளை; போலீசார் விசாரணை
-
டில்லியில் பல இடங்களில் கொட்டியது கனமழை; ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்