மினரல் வாட்டர் பிளான்ட் பழுது குடிநீருக்கு அலையும் நோயாளிகள்: அரசு தலைமை மருத்துவமனையில் அவலம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடரும் குடிநீர் பிரச்னையால் நோயாளிகள் குடிநீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கர்ப்பிணிகள் மற்றும் உள்ளிருப்பு நோயாளிகள் என பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 15 நாட்களாக பிரசவ வார்டு, காத்திருப்போர் அறை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மினரல் வாட்டர் பிளாண்ட் பழுதானதால் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் மாற்று ஏற்பாடாக 25 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் வைக்கப்பட்டது. அதுவும் ஒருமுறை மட்டும்தான் நிரப்பப்படுவதாகவும் பின்னர் காலியாக உள்ளதால், நோயாளிகள் வெளியில் சென்று குடிநீர் விலை கொடுத்து வாங்கி வர வேண்டிய நிலையில் இருப்பதாக புலம்புகின்றனர். மாவட்ட மருத்துவ நிர்வாகம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.--
மேலும்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது