‘ஹைமாஸ்’ விளக்கு பழுதால் மக்கள் அவதி
பேரையூர்: டி.கல்லுப்பட்டியில் கள்ளிக்குடி ரோட்டில் தலைமை ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இங்கே பிரசவம், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் செயல்படும் இம்மையத்திற்கு தி னமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.
இம்மையத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் ைஹமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. பேரூராட்சியினர் பராமரித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த விளக்குகள் பழுதானது. இப்பகுதி முழுவதும் இருளில் உள்ளது. பேரூராட்சியில் பலமுறை புகார் கூறியும் நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. இரவில் திருட்டு அச்சம் அதிகமாக உள்ளது. இந்த ைஹமாஸ் விளக்குகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் பேரூராட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
Advertisement
Advertisement