ரோபோடிக் மூலம் 100 அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை

மதுரை: மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை 100 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்துள்ளது. அதிநவீன, குறைந்தபட்ச ஊடுருவல் ரோபோடிக் அறுவை சிகிச்சை சாத்தியமாகி உள்ளதாக மருத்துவமனை மதுரை மண்டலத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நிகில் திவாரி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் 100 ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் நிறைவடைந்திருப்பது, தென் தமிழக மக்களுக்கு அதிநவீன அறுவை சிகிச்சை சேவைகளை எளிதாகக் கொண்டு சேர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அறுவை சிகிச்சை, இரைப்பைக் குடலியல், சிறுநீரகவியல்,

மகப்பேறியல், மகளிர் நோயியல் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் மற்றும் பொது அறுவை சிகிச்சை துறைகளில் இந்த ரோபோடிக் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரோபோடிக் மிகச்சிறிய கீறல்கள் மூலமே அறுவை சிகிச்சை செய்கிறது. இது தெளிவான காட்சிப்படுத்தல், துல்லியம் மற்றும் முழுமையான கட்டுப்பாட்டுடன் சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது.

அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி, நோய்த்தொற்று அபாயம், மருத்துவமனையில் தங்கும் காலம் குறைகிறது என்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஷோபனா, டாக்டர்கள் சீனிவாசன் ராமச்சந்திரன், பாலு மகேந்திரா, விஷ்ணுராஜா, மதுசூதனன், ஹேமலேகா, ராகவி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement