புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்திற்கு பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தர்மபுரி: புரட்டாசி மாத, 4வது சனிக்கிழமையான நேற்று, பழைய தர்ம
புரி அடுத்த வரதகுப்பம் வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோவிலில், அதிகாலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. இதில், வெள்ளி கவச அலங்காரத்தில் மூலவர் அருள் பாலித்தார். அதேபோல், மூக்கனுார் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி தங்கக்
கவச அலங்காரத்திலும், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி மலர் அலங்காரத்திலும், லளிகம் சென்றாய பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.
* அரூர் பழையபேட்டை கரிய
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதே போல், அரூர் பரசுராமன் தெருவிலுள்ள வெங்கடேச பெருமாள் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் கோவில், எம்.வெளாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ட ரமண பெருமாள் கோவில் மற்றும் பெரியப்பட்டி, தொங்கனுார் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* மணியம்பாடியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவிலில் மலர் அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பொம்மிடி அடுத்த கதிரிபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி, பூர்ண சந்தன காப்பு ஸ்ரீநிவாச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும்
-
சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
-
பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் வழங்க உறுதியேற்போம்; முதல்வர் விஜய் உறுதி
-
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயரை வைத்து விடலாம்; சொல்கிறார் டிரம்ப்
-
தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்