வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்ட 3வது மாநாடு நடந்தது.

மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுகேந்திரன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், மாதப்பன், குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் திருமலைவாசன் பேசியதாவது: வருவாய் கிராம ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். 2004க்கு பின் பணியில் ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., தொகை திரும்ப வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்டத்தில், 2025ம் ஆண்டிற்கான பதவி உயர்வு குறித்து குறித்த காலத்தில் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஊழியர்கள், அரசு ஊழியர் பட்டியலில், 'பிரிவு - டி' பிரிவில் இணைக்க வேண்டும். இது குறித்து அரசுக்கு மனுவாக அனுப்ப உள்ளோம். இவ்வாறு, அவர் பேசினார்.மேலும், வாரிசுதாரருக்கு வேலை, கல்விக்கேற்ற பணி ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட, 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Advertisement