தீவன வியாபாரியிடம் ரூ. 1.28 லட்சம் மோசடி

சேலம்:சேலம் மாவட்டம், இடைப்பாடியை சேர்ந்த கண்ணன், 58, கால்நடை தீவன வியாபாரி. இவரது மொபைல் போனுக்கு, கடந்த ஜூன், 1ல், வாட்ஸ்அப்பில், ஆர்.டி.ஓ., சலான் செயலி லிங்க் வந்துள்ளது.

அதில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, தங்களது வாகனத்துக்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதை நம்பிய அவர், அந்த செயலியை பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 1.28 லட்ச ரூபாய் காணாமல் போய்விட்டது. அதன் பிறகே, அது போலியான செயலி என்றும், அதன் மூலம், 1.28 லட்ச ரூபாயை பறி கொடுத்தது பற்றி, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன்படி, ஆன்லைனில், ரூ.1.28 லட்சம் மோசடி என வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement