மளிகை பொருள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து
ஆத்துார்:ஆத்துார் புறவழிச் சாலை வழியாக, மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற ஈச்சர் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேலம், செவ்வாய்பேட்டையில் இருந்து தலைவாசல், காட்டுக்கோட்டை பகுதிக்கு மளிகை பொருட்கள் ஏற்றிக் கொண்டு ஈச்சர் மினி லாரி, நேற்று ஆத்துார் புறவழிச் சாலையில் சென்றது. மினி லாரியை, வாழப்பாடியை சேர்ந்த டிரைவர் விக்னேஷ், 35, ஓட்டினார். ஆத்துார், தென்னங்குடிபாளையம் வந்தபோது, சாலையில் விபத்தை தடுக்க வைத்துள்ள 'பேரிகார்டு' மீது மோதியதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதில் மளிகை பொருட்களின் மூட்டைகள் சாலையில் சிதறின. காயமடைந்த டிரைவர் விக்னேைஷ, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
Advertisement
Advertisement