காவிரி கலை அறிவியல் கல்லுாரியில் தொல்லியல் ஆய்வு கருத்தரங்கம்

சேலம்,:காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையில், 'தமிழரும் கீழடியும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் கவிதா வரவேற்றார். சேலம்,மேச்சேரி, தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தலைமை வகித்தார்.

கல்லுாரி முதல்வர் செல்வக்குமார் வாழ்த்தி பேசினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் கவிதா, அனிதா, மேனகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர்.

புதுடில்லி, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில்.'' உண்மையான வரலாறு என்பது தொல்லியல் ஆய்வு மட்டுமே. தொல்லியல் பொருட்களில் புனைவுகள் இருக்காது. அனைவரையும் கட்டிப்போடும் சொல் கீழடிதான்,'' என்றார்.

சென்னை மாநில கல்லுாரி, வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் மாரப்பன், 'இந்தியாவின் வரலாற்றை குறிப்பாக தமிழகத்தின் வரலாற்றை தமிழருக்கான அடையாளத்தை நமக்கு கொடுத்தது கீழடி' என்றார். மேட்டூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் அரங்க சீனிவாசன் வைகை ஆற்றங்கரையின் அகழாய்வினால், இந்தியாவின் மனித சமூகம்தான் முன்னோடியான சமூகம் என்று கீழடி ஆய்வறிக்கையின் சிறப்புகளை கூறி பேசினார்.

தி காவிரி கல்வி நிறுவனங்களின் கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், தாளாளர் இராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், இணை செயலாளர் ஹரிசங்கர், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.

Advertisement