தி அக் ஷயா அகாடமி கேம்பஸ் பள்ளியில் விளையாட்டு விழா

சேலம்:சேலம் தி அக் ஷயா அகாடமி கேம்பஸ் பள்ளியில், 2-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளி செயலாளர் மங்களராம், காயத்திரி மங்களராம் தலைமை வகித்தனர். பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மஹாலக்ஷ்மி, கீதா, பள்ளி முதல்வர் கோமதி ஆகியோர், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். 9ம் வகுப்பு மாணவி ஹரிதன்ய ஸ்ரீ வரவேற்றார். முதன்மை முதல்வர் சந்திரசேகரன், போட்டியை துவங்குவதற்கு அடையாளமாக புறாக்களை பறக்க விட்டு துவக்கி வைத்தார். பின்னர், 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு, 4x100 மீட்டர் உள்பட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற 408 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டன. மாணவர்களை டோபாஸ், ரூபி, சபையர், எம்ரால்டு என 4 அணி

களாக பிரித்தனர். இதில் சிறந்த அலங்காரம் செய்த முதல் அணியாக ரூபி அணியும், இரண்டாவதாக எம்ரால்டு அணியும் இடம் பெற்றன. பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்ற சபையர் அணி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. எம்ரால்டு அணி இரண்டாம் இடம் பெற்றது. 8ம் வகுப்பு மாணவி ஷஷ்டிகா நன்றி கூறினார்.

போட்டி ஏற்பாடுகளை முதன்மை முதல்வர் சந்திரசேகரன், தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மஹாலக்ஷ்மி, கீதா, முதல்வர் கோமதி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், முதன்மை மேலாளர் புவன் தினேஷ், துணை மேலாளர் கவுதம் வாசுதேவன் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement