பாசன நீர் திறப்பு குறைப்பு
மேட்டூர்:மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் திறப்பு நேற்று மாலை வினாடிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த செப்.,6ல் அணை நீர்மட்டம், 92.39 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 7,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்
திறப்பு, செப்.,6ல், 10,000 கனஅடியாகவும், மறுநாள், 12,000 கனஅடியாகவும், 30ல், 15,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதி
யில் மழையில்லாததால் அணை நீர்வரத்து வெகுவாக சரிந்தது.
இதனால் வினாடிக்கு, 15,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்
திறப்பு நேற்று மாலை, 6:00 மணிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை அணை நீர்மட்டம், 64.28 அடியாகவும், நீர் இருப்பு, 27.97 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. கடந்த, 35 நாட்களில் அணை நீர்மட்டம், 28.11 அடியும், நீர்இருப்பு, 27.45 டி.எம்.சி.,யும் குறைந்துள்ளது.
மேலும்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்