புகழூரில் ரேஷன் குறைதீர் கூட்டம்

கரூர்:புகழூர் தாலுகாஅலுவலகத்தில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார்.

பொது விநியோக திட்டத்தின் மூலம், இந்த தாலுகாவிற்கு உட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை கோருதல், மொபைல் எண் பதிவு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டுள்ளனர்.

Advertisement