வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

குளித்தலை:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தொண்டமாங்கிணம் கிராமம், பெருமாள் கவுண்டம்பட்டி ஓட்டுச்சாவடி மையத்தில், குளித்தலை சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சப்-கலெக்டர் சேஷத்ரிமயும் தீபி சானு ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தனி தாசில்தார் நீதிராஜன், வருவாய்துறையினர், ஓட்டுச்சாவடி மைய நிலைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதேபோல் குளித்தலை அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற முகாமை, குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன் பார்வையிட்டார். நகராட்சி கமிஷனர் சுதர்ஷன், தாசில்தார் மணிவண்ணன், மற்றும் வருவாய்துறையினர் பங்கேற்றனர்.

Advertisement