புகழூரில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
கரூர்:புகழூரில், இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது என, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: புகழூர், டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (11ம் தேதி) காலை, 8:00 மணி முதல் நடக்கிறது. கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து, கண் எரிச்சல், கண் வலி, கண் கருவிழியில் புண், கண் பார்வை குறைபாடு, கண் விழித்திரையில் பார்வையிழப்பு (சர்க்கரை நோய் காரணமாக), பிறவி கண்புரை, கண் நீர் அழுத்த நோய் மற்றும் இதர கண் சம்பந்தமான நோய்கள் உள்ள பொதுமக்கள், முகாமில் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மேலும் கண் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு, கண் கண்ணாடிகள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பாக இலவசமாக வழங்கப்படவுள்ளது. கண்புரை உள்ள நோயாளிகள் அனைவருக்கும் உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம்.
கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர, ஆலை நிர்வாகம் சார்பில் புன்னம்சத்திரம், தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் வருபவர்கள் ஆதார் அட்டை நகல், மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு