தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து காவலில் வைத்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜினாமா கோரி நடைபெற்ற பெரும் போராட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான தடுப்புக்காவல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தது.
பல தரப்பினரும் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் கருத்துகளுக்கு ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் தூதரகம் உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளது. அதன் அறிக்கை: டில்லியில் நடந்த போராட்ட நிகழ்வுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துகளை நாங்கள் கவனித்தோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும்; இங்கு அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை இருக்கிறது. மற்ற அனைத்து ஜனநாயக நாடுகளையும் போலவே, இந்திய மக்களும் பொது ஒழுங்கைப் பேணும் வகையில் விதிக்கப்படும் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகார அமைப்புகள் சட்டத்திற்கு இணங்கச் செயல்படுகின்றன; குறைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்பும் எவருக்கும் நமது நீதிமன்றங்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கவலைகள் அடிப்படையற்றவை; அவை இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடாக அமைகின்றன. உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் பெரிய அளவிலான போராட்டங்கள் மீதும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதேபோன்ற கவனத்தைச் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நல்ல பதில். புத்தி வந்த சரி
மேற்கு வங்காளத்திலும் பங்களாதேஷிலும் இந்துக்கள் கொல்லப்பட்ட போது ஐநா சபை கூமுட்டைகள் எங்கே சென்றார்கள்மேலும்
-
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயரை வைத்து விடலாம்; சொல்கிறார் டிரம்ப்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு