அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு என் பெயரை வைத்து விடலாம்; சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: நாம் ஏற்கனவே மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்றும், ஒண்டாரியோ ஏரியை 'அமெரிக்க ஏரி' என்றும் மாற்றியுள்ளோம். இப்போது நமக்கு ஒரு நதியும், ஒரு பெருங்கடலும் தேவைப்படுகிறது. எனது பதவிக்காலம் முடிவதற்குள் ஒரு பெருங்கடலின் பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.
அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப் பெருங்கடல்' அல்லது 'அமெரிக்காவின் பெருங்கடல்' எனப் பெயர் மாற்றலாம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.
டிரம்பின் இந்த யோசனை கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் ஏற்படுத்திய அதே வேளையில், சமூக ஊடகங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி 'டிரம்ப் ஜலசந்தி' என மாற்றும் எண்ணத்தையும் டிரம்ப் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி, ஹார்முஸ் ஜலசந்தியை, அதை 'டிரம்ப் ஜலசந்தி' என்று குறிக்கும் வரைபடத்தை டிரம்ப் பகிர்ந்துள்ளார். தற்போது அவரது கவனம் பெருங்கடலுக்கு பெயர் மாற்றுவது குறித்து திரும்பி இருக்கிறது.
மேலும்
-
தேவையற்ற தலையீடு: ஐநா மனித உரிமை அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்
-
கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி தீவிரம்
-
பனாமா நாட்டு மக்களுக்கு துணை நிற்போம்; இக்கட்டான சூழலில் இந்தியா ஆதரவுக்கரம்
-
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்காதீர்கள்; உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்
-
ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நாயகன் கேப்டன் ஸ்மிட் மச்சார்: இஸ்ரேல் மீண்டும் பாராட்டு
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு