மதுரையில் அக்.20ல் தினமலர் நடத்தும்'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: முன்பதிவு செய்யுங்கள்

மதுரை: மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து நடத்தும் 'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் (சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்டது) அக்.20 காலை 8:50 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.

தினமலர் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் விஜயதசமி திருநாள், வித்யாரம்பத்துக்கு உகந்த நாளில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பள்ளி வகுப்பறைக்குள் செல்வதற்கு முன் கல்விக் கோயிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக பங்கேற்பர்.

இந்தாண்டும் அக்.20ல் நடக்கவுள்ள இந்நிகழ்ச்சியில் இரண்டரை முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகள் பங்கேற்க இன்று முதல் முன்பதிவு செய்யலாம். குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, அலைபேசி எண் ஆகிய விபரங்களை 82200 16423 என்ற அலைபேசி எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்யலாம். நிகழ்ச்சியின்போது பூஜைக்குரிய பொருட்கள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை: அம்மன் உயர்தர சைவ உணவகம். கோ ஸ்பான்சர்: ஆனந்தா அன்ட் ஆனந்தா, கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, கார்த்திகா அன்ட் கோ அரிசி மற்றும் மளிகை மொத்த வியாபாரம். அனுமதி இலவசம்.

Advertisement