எப்போது திருந்துவார்கள்... மின் கம்பங்களில் மீண்டும் பேனர்!
விழுப்புரம் மாவட்டத்தில் நகர பகுதிகள், பேரூராட்சி மட்டுமின்றி கிராமப் பகுதிகள் வரை அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் பிறந்தநாள், திருமண விழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பேனர்கள், விதிமுறைகளை பின்பற்றாமல், முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பங்கள் அருகேயும் ஆக்கிரமித்து வைக்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் விழுப்புரம் கே.கே.,ரோடு கணபதி நகரில் ஹைமாஸ் விளக்கு கம்பத்தில் பேனர் கட்ட முயன்றபோது, மின் கம்பியில் பட்டு, வாலிபர் ஒருவர் இறந்தார். இதையடுத்து, மாவட்டம் முழுதும் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அவசர, அவசரமாக அகற்றினர்.
ஆனால், டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இதனால், மாவட்டம் முழுதும் மட்டுமின்றி, கலெக்டர், எஸ்.பி., உள்ள விழுப்புரம் நகரிலும் மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் தலைதுாக்கியுள்ளது.
அதிலும், விழுப்புரம் நகரில் உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் டிஜிட்டல் பேனர் கட்டுவது அதிகரித்துள்ளது. மின் கம்பத்தில் பேனர் கட்டியபோது ஒரு உயிர் போன பின்னும், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் விபரீதத்தை உணர்ந்து செயல்படாமல் விதிமுறை மீறி செயல்படுவது வேதனையளிக்கிறது.
மாவட்டத்தில் மீண்டும் ஒரு உயிர் இழப்பு ஏற்படும் முன் டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சிறப்பு பக்கத்திற்கு................. மின்வெட்டு ஏற்படுவது உண்மையா? தமிழக அரசு ரகசிய கண்காணிப்பு
-
பட்டாக்களில் தொடரும் பிழைகளுக்கு 26 ஆண்டுக்கு பின் வருகிறது விமோசனம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி
-
பட்டாசுகள் கையாள்வதில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை
-
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை: கேரள முதல்வர் சதீசன் தகவல்
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் அமைச்சர் நேரில் வாழ்த்து