இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மணிவண்ணன், அரிகிருஷ்ணன், பாலு, பாக்கியம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணை செயலாளர் சேகர், பொருளாளர் பாஸ்கர், சிவக்குமார், லோகநாதன், சுந்தரராஜா கோரிக்கைளை வலியுறுத்தி பேசினர். கடலுார் லாரன்ஸ்ரோட்டில் மக்கள் நடந்து செல்லும் இடது பக்க நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement